Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ. மரணம்: போயஸ் கார்டனை முன்வைத்து எழும் இத்தனை கேள்விகளுக்கு விடை யார் தருவது?

ஜெயலலிதாவின் மரணத்தில் மையப்புள்ளியாக இருக்கும் போயஸ் கார்டனை முன்வைத்து எழும் விடைதெரியாத கேள்விகளின் தொகுப்பு.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் மையப்புள்ளிகளாக இருக்கும் போயஸ் கார்டன் பங்களா மற்றும் அப்பல்லோ மருத்துவமனையை முன்வைத்து ஏராளமான விடைதெரியாத கேள்விகள் எழுந்துள்ளது.

சென்னை போயஸ் கார்டன் பங்களாவில் செப்டம்பர் 22-ந் தேதி ஜெயலலிதா மயங்கிய நிலையில் கிடந்தார். அவர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அப்பல்லோவும் தமிழக அரசும் உறுதி செய்துவிட்டது.

Questions about Jayalalithaa death and Poes Garden

இதைத் தொடர்ந்து எழும் கேள்விகளின் தொகுப்பு:

1) ஜெயலலிதாவுக்கு மயக்கம் எப்படி ஏற்பட்டது?

2) போயஸில் ஜெயலலிதா மயக்கமடைந்த நிலையில் எந்த இடத்தில் இருந்தார்? படுக்கை அறையிலா அல்லது ஹாலிலா?

3) ஜெயலலிதா மயக்கமடைந்த போது உடனிருந்தவர்கள் எத்தனை பேர்? யார் யார்?

4) ஜெயலலிதா மயக்கமடைந்ததை பார்த்ததாக சொல்லப்படும் பணிப் பெண் எங்கே?

5) ஜெயலலிதா மயக்கமடைந்த நாளில் போயஸில் அரசு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக சொல்லப்படுவது உண்மையா?

6) செப்டம்பர் 22-ந் தேதி இரவு சசிகலா யார் யாருக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார்?

7) ஜெயலலிதாவை அப்பல்லோவுக்கு கொண்டு போக வேண்டும் என்று தீர்மானித்தது யார்?

8) போயஸில் ஜெயலலிதா தாக்கப்படவே இல்லை என்கிற முடிவுக்கு தமிழக அரசு எப்படி வந்தது?

9) ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்டிருந்த கமாண்டோ படையினர் ஏன் அப்பல்லோவுக்கு போகவில்லை?

10) கமாண்டோ படையினரை வீட்டுக்குப் போக உத்தரவிட்டது எந்த சக்தி?

11) ஜெயலலிதா மரணத்தில் மர்மமே இல்லையெனில் போயஸ் கார்டன் சிசிடிவி காமிரா காட்சிகளை வெளியிட தயக்கம் ஏன்?

12) தம்மையும் தமது அரசையும் கவிழ்க்க சதி நடந்தது என ஜெயலலிதா கூறினார்; ஆம் அப்படி ஒரு சதி நடந்தது என்பதை ஒப்புக் கொண்டுதான் போயஸில் சசிகலாவும் மீண்டும் சேர்ந்தார். அப்படியானால் அந்த சதி என்ன?

13) ஜெயலலிதாவுக்கும் அவரது அரசுக்கும் எதிராக சதி செய்தவர்களுடன் அவரது மறைந்த உடனேயே திடீரென சசிகலா கை கோர்த்தது எப்படி? எதற்காக?

14) ஜெயலலிதாவுக்கு முன்னர் என்னநோய்கள் இருந்தன?

15) ஜெயலலிதாவின் ரத்த உறவுகள், நீண்டகால மருத்துவர்கள் திடீரென போயஸுக்குள் அனுமதிக்காதது ஏன்?

16) ஜெயலலிதாவுக்காக குஜராத் நர்ஸை அப்போதைய அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி அனுப்பியதன் பின்னணி என்ன?

17) குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி ஜெயலலிதாவை எச்சரித்திருந்தார் என்கிற போது என்ன மாதிரியான மருந்துகளும் உணவுகளும் அவருக்கு கொடுக்கப்பட்டன?

18) போயஸ் கார்டனிலேயே கமாண்டோ பாதுகாப்பில் ஜெயலலிதா இருந்தபோது அரசு ஆம்புலன்ஸ் இருந்ததே... மயக்கமடைந்த உடனேயே அதில் ஏன் ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+