பேரறிவாளன் மீது தாக்குதல், ராம்குமார் தற்கொலை… கேள்விக் குறியாகும் சிறை பாதுகாப்பு !
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் சக கைதியால் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் வைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து சிறைகளில் நடைபெறும் இந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது சிறைச்சாலைகளில் உள்ள பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளாக வேலூர் சிறையில் உள்ளார் பேரறிவாளன். இவர் ஒரு ஆசிரியர் போல் அங்குள்ள சக கைதிகளுக்கு பாடம் கற்பித்து கொண்டிருந்த நிலையில், சக கைதியான ராஜேஷ் கண்ணா இரும்பு கம்பியால் தலையில் அடித்து தாக்கியுள்ளார். இதனால் பேரறிவாளனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 6 தையல்கள் போடப்பட்டுள்ளன. பேரறிவாளன் ஏன் தாக்கப்பட்டார். ராஜேஷ் கண்ணா யார்? அவர் கையில் இரும்பு கம்பி எப்படி கிடைத்தது? இப்படி பல கேள்விகளுக்கு சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும் பதில் கிடைக்கவில்லை.
இந்நிலையில், மற்றொரு முக்கிய வழக்கான சுவாதி கொலை வழக்கில் சிறையில் வைக்கப்பட்டிருந்த ராம்குமார் சிறை அறையில் இருந்த மின்கம்பியை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசாரால் சொல்லப்படுகிறது. எப்படி ஒரு சிறை அறையில் உள்ள மின்கம்பியை ஒரு கைதி கடித்து தற்கொலை செய்து கொள்ள முடியும்? அப்படி முடியும் என்றால் அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவிற்கு பலவீனமாக இருக்கிறது? சிறையில் பாதுகாப்பு பணியில் போலீசார் எவ்வளவு அலட்சியமாக இருக்கின்றனர் என்பது பற்றி எல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications