காரைக்குடியில் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி
காரைக்குடி: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக காரைக்குடி வட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான துளிர் அறிவியல் வினாடிவினா போட்டி காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 17-8-16 அன்று நடத்தப்பட்டது.
துவக்க விழாவிற்கு தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் பீட்டர்ராஜா அனைவரையும் வரவேற்றார்.

காரைக்குடி அரிமா சங்க தலைவர் இரத்தின சபாபதி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் ரகுபதி, தலைமையாசிரியர் வள்ளியப்பன், துளிர் வினாடி வினா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எட்வின் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க காரைக்குடி வட்ட செயலர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து அவர்கள் வினாடி வினா போட்டிகளை துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது.6,7,8 வகுப்புகளுக்கான போட்டி பட்டதாரி ஆசிரியர்கள் சேகர் மற்றும் சொர்ணலதா ஆகியோரால் நடத்தப்பட்டது. 9,10 வகுப்புகளுக்கான போட்டி பட்டதாரி ஆசிரியர்கள் பிரான்சிஸ் சேவியர் மற்றும் ஜெயந்தி ஆகியோரால் நடத்தப்பட்டது.11, 12 ம் வகுப்புகளுக்கான போட்டி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ராஜபாண்டியன் மற்றும் சிவஜோதி ஆகியோரால் நடத்தப்பட்டது.

6,7,8 ம் வகுப்புகளுக்கான போட்டியில் கண்டனூர் சிட்டாள் ஆச்சி நினைவு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசு பெற்றனர். 9,10 வகுப்புகளுக்கான போட்டியில் எஸ்.எம்.எஸ்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசு பெற்றனர். 11,12 ம் வகுப்புகளுக்கான போட்டியில் அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசு பெற்றனர்.

பரிசளிப்பு விழாவில் காரைக்குடி பரோடா வங்கி மேலாளர் ஆரோக்கியராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வினாடி வினா போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் தெரிவித்தார்.
காரைக்குடி செயலர் திரு.பி.செந்தில்குமார் அவர்கள் நன்றி கூறினார்,நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் கோமதி மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சேகர், சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications