விஷால்னா விசில்...விசில்னா விஷால் - டக்குன்னு நினைவுக்கு வருமேப்பா
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனக்கு விசில் சின்னத்தை ஒதுக்குமாறு கேட்டுள்ளார் விஷால். இதற்கான பின்னணி காரணம் சுவாரஸ்யமானது.
Recommended Video

சென்னை: விஷால்னா விசில். இப்படி மக்களுக்கு டக்குன்னு ஞாபகம் வரும் இல்லையா அதனால்தான் விசில் சின்னத்தை கேட்டிருப்பாரோ விஷால்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக நடிகர் விஷால் சனிக்கிழமையன்று அறிவித்தார். இந்நிலையில், வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது வேட்புமனுவில் தனக்கு விசில் சின்னத்தை ஒதுக்குமாறு கோரியுள்ளார். விசில் கிடைக்காவிட்டால் படகு அல்லது கேரம் போர்டு சின்னத்தை அளிக்கவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் விசில் கேட்டதே வாக்காளர்களுக்கு எளிதாக நினைவுக்கு வரவேண்டும் என்றுதானாம்.
விஷால் விசில் என உச்சரிப்பில் இரண்டும் ஒன்று போலவே வருகிறது
விசில்னா விஷால் விஷால்னா விசில். இப்படி மக்களுக்கு டக்குன்னு ஞாபகம் வரும் இல்லையா. அதனால் கேட்டிருப்பாரோ. விஷால் கேட்டது போல விசில் கிடைத்து விட்டால் அவருக்கு அதிர்ஷ்டம்தான்.
வடசென்னைவாசிகள் கேரம்போர்ட் அதிகம் விளையாடுவார்கள். அதுவும் எளிதில் நினைவுக்கு வரும் சின்னம்தான். அதேபோல மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் படகு சின்னத்தையும் கேட்டுள்ளார் விஷால். டிசம்பர் 7ஆம் தேதிக்கு மேல்தான் விஷாலுக்கு என்ன சின்னம் ஒதுக்கப்படும் என்பது தெரியவரும்.

விஷாலின் V Shall ஆப்
நடிகர் விஷால் ஏற்கனவே V Shall என்ற ஆப் தொடங்கியுள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள விஷால், ஸ்மார்ட் போன் மூலமாக நிறைய தெரியாத நபர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய வாய்ப்பு உள்ளது. சமூக சேவை மூலமாக அதைச் செய்ய முடியும். இதற்காக சுமார் ஒன்றரை வருடங்கள் நண்பர்களோடு சேர்ந்து, இச்செயலி விஷயங்களில் ஈடுபட்டு வந்தோம். அது தான் 'V Shall' செயலி.

செயலி மூலம் பயன்
உலகத்திலேயே முதல் சமூகசேவை செயலியாக இது உருவாகியுள்ளது. நிறையப் பேர் வீட்டில் பழைய துணிகளோ, குழந்தையின் பிறந்த நாளுக்கு அன்னதானம் உள்ளிட்டவற்றை எப்படி செய்யலாம் என்ற கேள்வி இருக்கும். அந்த சமயத்தில் இச்செயலி உதவியாக இருக்கும். முக்கியமாக கல்வி, மருத்துவம், சாப்பாடு என நிறையப் பிரிவுகளை வைத்திருக்கிறோம்.

மக்களின் கோரிக்கைகள்
தமிழகம் முழுவதும் பண வசதியின்றி படிக்க முடியாமல் இருப்பவர்கள், இந்த செயலியில் பதிவு செய்யலாம். இதில் வரும் அனைத்து கோரிக்கைகளுமே சரிபார்த்துதான் வரும். இதில் எந்ததொரு தவறான பதிவுமே இடம்பெறாது. அனைத்து கோரிக்கைகளையும் ஒன்றிணைப்பதே 'V Shall' செயலியின் முதல் பணி.கண்டிப்பாக இதன் மூலம் பலரது வாழ்க்கை மாற்றியமைக்கப்படும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

ட்ரிபிள் வி
விஷால், v shall ஆப், விசில் சின்னம் என எல்லாமே வி வருவது போது பார்த்துக்கொண்டுள்ளார் விஷால். வி என்றால் விக்டரி. வி என்றால் வெற்றி என்று நினைத்துக்கொண்டுள்ளார் விஷால். அந்த வி சென்டிமெண்ட் கைகொடுக்குமா பார்க்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications