ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பு கேமரா.. தேர்தல் ஆணையம் அதிரடி
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பு கேமரா பொறுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை: ஆர்.கே.நகரின் முக்கியச் சாலைகள், சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புக் கேமரா பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் பணப்பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பு கேமரா பொறுத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகரில் வரும் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இடைத் தேர்தலைக் கண்காணிக்க 3 பார்வையாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிலையில், மேலும் 2 சிறப்புப் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் கூடுதலாக நியமித்துள்ளது.

ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதனையடுத்து துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா சென்னை வந்துள்ளார் இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து தமிழக துணைத் தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க ஆர்.கே.நகரில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொகுதியின் முக்கியச் முக்கியச் சாலைகள், சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புக் கேமரா பொறுத்தப்படும் என்றும் 256 வாக்குச்சாவடி மையங்களிலும், வெப் கேமரா பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் அவற்றை ஆர்.டி.ஐ. சட்டத்தின் மூலம் பொதுமக்கள் பெறவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
மேலும், வாக்காளர் விழிப்புணர்வுக்காக மாதிரி வாக்குப்பதிவு மையமும் அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக, இன்று முதல் தேர்தல் முடியும் வரை தலா 2 ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். பறக்கும் படையினர் ஜிபிஎஸ் கருவியை பயன்படுத்துவார்கள்.
தொகுதிக்கு வெளியே பணப்பட்டுவாடாவை தடுக்க 5 தனிப்படைகள் அமைக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதேபோல், வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்க 5 வருவாய்த் துறை அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications