ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வழக்கு.. விரைந்து விசாரிக்க தேர்தல் ஆணையம் கோரிக்கை.. நாளையே "ஹியரிங்"!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு மீது நாளை விசாரணை நடைபெறும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான திமுகவின் வழக்குகள் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவரது ஆர்.கே.நகர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆனால் அந்த தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக கிடைத்த தகவலின்பேரிலும் அமைச்சர் வீட்டில் வருமான வரித் துறை நடத்திய சோதனையின் அடிப்படையிலும் அந்த தேர்தல் ஏப்ரல் 10-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.
அதிமுகவில் நடைபெறும் மோதல் காரணமாக இந்த தேர்தலில் மக்கள் யாரை ஆதரிக்கின்றனர் என்பதை பார்க்க திமுக , அதிமுகவின் இரு அணிகளும் ஆர்வமாக உள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்னர் குஜராத் தேர்தல் தேதி அறிவித்தபோது ஆர்.கே.நகருக்கு இந்த ஆண்டுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி தெரிவித்தார்.
இதனிடையே, போலி வாக்காளர்களின் நீக்கம் குறித்தும், பணப்பட்டுவாடா குறித்தும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதியும், மருதுகணேஷும் (ஆர்.கே.நகர் வேட்பாளர்) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை அறிவிக்க இந்த வழக்குகள் இடைஞ்சலாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறையிட்டது.
தேர்தல் ஆணையத்தின் முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பான திமுக வழக்குகள் மீது நாளை விசாரணை நடத்தப்படும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications