ரஜினியால் அரசியலில் ஜொலிக்க முடியாது...சொல்கிறார் ராதாரவி
தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும் என்றும் என்றும் ரஜினியால் அரசியலில் ஜொலிக்க முடியாது என்றும் நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விரைவில் திமுகவில் இணைவார் என்றும், தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும் என்றும் திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகர் ராதாரவி கூறியுள்ளார். ரஜினியால் அரசியலில் ஜொலிக்க முடியாது என்றும் ராதாரவி கூறியுள்ளார்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ராதாரவி, மதிமுகவை தாக்கினார்.
மதிமுகவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதை தெரிந்து கொண்டுதான் வைகோ கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை.

வைகோவின் நிலை
இது இப்படியே நீடித்தால் இனி கட்சி நடத்த முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ள வைகோ தாய் கட்சியான திமுகவில் இணைய முயற்சி செய்து வருகிறார்.

ரஜினியின் நிலை
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் பிரவேசிக்க உள்ளதாக செய்திகள் வந்து உள்ளன. ஒருவேளை அவர் அரசியலில் குதித்தால் ஜொலிக்க முடியாது. நான் நீண்ட நாட்களாக அரசியலில் உள்ளதால் இதை சொல்கிறேன். அரசியல் வேறு. சினிமா வேறு.

அரசியல் குழப்பம்
அதிமுகவில் தற்போது உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது. ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகு இந்த குழப்பத்திற்கு விடை கிடைக்கும். அப்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்க வாய்ப்புகள் குறைவு.

மாட்டிறைச்சி சட்டம்
நாட்டில் வேலை வாய்ப்பு பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை. இப்படி பல பிரச்சனைகள் உள்ளன. இவற்றை தீர்க்க முடியாத மோடி அரசு சிறுபான்மையினரின் மனதை புண்படும் விதத்தில் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்ற சட்டத்தை இயற்றி உள்ளது. இந்த பொருளைத்தான் உண்ண வேண்டும் என்று கட்டாயப்படுத்த நாட்டில் யாருக்கும் உரிமை கிடையாது. இதை பா.ஜ.க. உணர வேண்டும்.

பாஜகவினால் முடியாது
மத்தியில் உள்ள பாஜக அரசு மாநில அரசுகளை மிரட்டி ஆட்சி செய்து வருகிறது. தமிழ்நாட்டை அவர்களது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள பாஜக கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர். அக்கட்சியின் மாநில தலைவர் விரைவில் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி ஏற்பட போகிறது என்று அடிக்கடி பேசி வருகிறார்.

திமுக ஆட்சி மலரும்
விரைவில் அல்ல 400 ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பாஜகவினால் ஆட்சி ஏற்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் விரைவில் திமுக ஆட்சி மலர உள்ளது என்றும் கூறியுள்ளார் நடிகர் ராதாரவி.
-
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
தாய் சிறுத்தைக்கு ஷாக்..திமுகவுக்கு தாவும் குட்டி சிறுத்தைகள்! ‘யோசிக்கும்’ தலையும் ’ஊர்’ புள்ளியும் -
"கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்".. திமுகவுக்கு காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் பதிலடி! -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
“மாணிக்கம் தாகூர் சொல்வது அப்பட்டமான பொய்.. காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள்”.. விளாசிய திமுக! -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத் -
50 ஆண்டு விசுவாசம்! திருப்பூரில் கழகத்திற்குள் கலவரம்.. விலகிய மா.செ மீண்டும் திமுகவில் ஐக்கியம்! -
வசமாக சிக்கிய அனிதா ராதாகிருஷ்ணன்? வழக்கு தொடர அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம்.. விஜய் கையில் முடிவு -
வாயை விட்ட ஆ.ராசா! சர்ச்சையான ட்வீட்! கொந்தளித்த தவெகவினர்.. மதுரை போலீசில் புகார்!












Click it and Unblock the Notifications