தேர்தல் நேரத்தில் மைக்செட்காரர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் தான் விஜயகாந்துக்கும்: ராதாரவி
பழனி: தேர்தல் நேரத்தில் மைக்செட்காரர்கள், மேடை போடுபவர்கள், கொடி தோரணம் கட்டுபவர்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்குமோ அதே அளவு முக்கியத்துவம் தான் விஜயகாந்துக்கும் இருக்கிறது என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆதரவாளரான நடிகர் ராதாரவி பழனிக்கு வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். செய்தியாளர்கள் அவரிடம் தேர்தல் கூட்டணி, பிரச்சாரம் பற்றி கேட்டனர்.
அதற்கு அவர் கூறுகையில்,

அதிமுக ஆட்சி
கடந்த சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை எல்லாம் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. இது தவிர அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என பல நலத்திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியுள்ளார். இதனால் வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும்.

சரத்குமார்
பிரச்சாரம் செய்யுமாறு அதிமுகவில் அழைத்தால் நிச்சயம் பிரச்சாரம் செய்வேன். நான் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்வதன் மூலம் எனக்கும், சரத்குமாருக்கும் இடையே உள்ள நட்புக்கு பாதிப்பு வராது. அவர் பாஜக கூட்டணியில் உள்ளார். நட்பு வேறு, அரசியல் வேறு.

திருமா
திராவிடக் கட்சிகளை ஒழிப்பேன் என்று திருமாவளவன் கூறி வருகிறார். அப்படி என்றால் மதிமுக திராவிடக் கட்சி இல்லையா?

விஜயகாந்த்
தேர்தல் நேரத்தில் மைக்செட்காரர்கள், மேடை போடுபவர்கள், கொடி தோரணம் கட்டுபவர்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்குமோ அதே அளவு முக்கியத்துவம் தான் விஜயகாந்துக்கும் இருக்கிறது.

தனித்துப் போட்டி
சட்டசபை தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனியாக போட்டியிட வேண்டும். அப்படி போட்டியிட்டால் தான் அவற்றின் பலம் என்னவென்று தெரியும்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications