சரத்குமாருக்கு ஆதரவாக திருச்செந்தூரில் 2 நாட்கள் வாக்கு சேகரிக்கும் ராதிகா
சென்னை: சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமாருக்கு ஆதரவாக சமக மகளிரணித்தலைவியும் அவரது மனைவியுமான ராதிகா 2 நாட்கள் திருச்செந்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் மே 16ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள சமக தலைவர் சரத்குமார் இரட்டை இலைச் சின்னத்தில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட உடனேயே தனது பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார் சரத்குமார். தலைவர் சரத்குமாரை ஆதரித்து அக்கட்சியின் மாநில மகளிரணிச் செயலாளர் ராதிகா சரத்குமார் 2 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
அதன்படி முதல்கட்டமாக வருகிற 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட ஆழ்வார் திருநகர் ஒன்றியத்தில் 16 ஆம் தேதி சனிக்கிழமை அன்றும், திருச்செந்தூர் ஒன்றியம் மற்றும் காயல்பட்டினம் நகரப் பகுதிகளில் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றும் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications