மகளுக்கு கல்யாணம்... நான் ரொம்ப பிசி... ராஜினாமாவிற்கு ராதிகா கொடுத்த விளக்கம்
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவராக இருந்த சரத்குமார் நடிகர் சங்கத் தேர்தலில் தோல்வியடைந்தது ஒரு புறம் இருக்க சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவியாக இருந்த ராதிகா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டாராம். ஆகஸ்ட் மாதம் என் மகள் ரேயான் திருமணம் நடக்க இருக்கிறது இதனால் சங்கப்பணிகளை கவனிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் ராதிகா.
தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். தற்போது இச்சங்கத்தின் தலைவராக ராதிகா சரத்குமார் பொறுப்பு வகித்து வந்தார்.
இதுபோல் சங்கத்தின் செயலாளராக நடிகை குஷ்பு போட்டியின்றி தேர்வானார். சங்கத்தின் பொருளாளராக டி.ஆர். பாலேஸ்வர், துணைத்தலைவர்களாக குட்டி பத்மினி, சுஜாதா விஜயகுமார், இணை செயலாளர்களாக இ.ராமதாஸ், டி.வி.சங்கர் ஆகியோரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக பி.ராதா, சுஜாதா கோபால், பி.சீனிவாசன், மனோபாலா, சீனிவாசலு, மதி ஒளி குமார், வெங்கடாச்சலம், ஜெயக்குமார், செய்யாறு ரவி, வினயா கிருஷ்ணன், ஜெயவேல், சதீஷ் ஆகியோர் தேர்வானார்கள். சங்கத்தின் காப்பாளர்களாக ஏ.வி.எம். சரவணன், டி.ஜி.தியாகராஜன், அழகன் தமிழ்மணி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ராதிகா ராஜினாமா
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தை தொடங்கி அதன் தலைவராக இருந்து வந்த ராதிகா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

குஷ்பு உடன் ராதிகா
குஷ்புவுக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு என்றும், நடிகர் சஙங்க தேர்தலின்போது தனக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவில்லை அதனால் தான் ராதிகா ராஜினாமா செய்தார் என்று கூறப்பட்டது. ராதிகாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து தற்போது சுஜாதா தலைவராக(பொறுப்பு) இருந்து வருகிறார்.

ராதிகா விளக்கம்
அதே நேரத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை தனது சொந்த காரணங்களுக்காகத்தான் ராஜினாமா செய்துள்ளதாக ராதிகா தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் என் மகள் ரேயான் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்கான வேலைகளில் பிசியாகிவிட்டேன். என் மகன் கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கிறான். அவனுக்கு தனி கவனம் செலுத்த வேண்டியது இருக்கிறது.

சங்கத்திற்கு ஆலோசனை
திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறேன். இப்படி பல காரணங்களால் என்னால் சங்க பணிகளுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால் தான் ராஜினாமா செய்தேன். என்றாலும், சங்கத்துக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருப்பேன். இதுதான் உண்மையான காரணம். இதுதவிர சொல்லப்படும் வேறு காரணங்கள் அனைத்தும் பொய் என்று ராதிகா கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications