குஷ்புவைத் தொடர்ந்து ட்விட்டரில் 'ஏக வசனத்தில்' பதிலடி தந்த ராதிகா.. ஒரே ரணகளம்

தம்மை இழிவாக பேசிய நெட்டிசனுக்கு அதே பாணியில் பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை ராதிகா. ட்விட்டரில் இதுதான் பெரும் பஞ்சாயத்தாக ஓடுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோக் விளம்பரத்தில் நடித்ததை பற்றி கொச்சையாக விமர்ச்சித்தவருக்கு அதே பாணியில் பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை ராதிகா.

செம்பியன் @jallikattu_2017 என்பவர் நடிகை ராதிகா அண்மையில் வைரலான ராதிகாவின் கோக் விளம்பரம் தொடர்பாக "விபசாரி' என்பது உள்ளிட்ட மோசமான வார்த்தைகளுடன் விமர்சித்திருந்தார். இந்த விளம்பரம் சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்தது .

குடும்பத்தையே...

குடும்பத்தையே...

பொங்கியெழுந்த ராதிகா, செம்பியனுக்கு ஒரு பதிலடி மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் செம்பியன் @jallikattu_2017-ன் அம்மா மற்றும் குடும்பத்தினரை விபச்சாரிகளாக விமர்சித்து பதில் தந்தார் ராதிகா.

ராதிகா பதிலடி

ராதிகா பதிலடி

ராதிகாவின் இந்த விமர்சனத்தை ட்விட்டரில் போட்டுவிட்டார் செம்பியன் @jallikattu_2017. இதற்கு பதிலடியாக நடிகை ராதிகா, தமது பெண் ரசிகைகளிடம் தவறாக நடந்து கொண்டார் செம்பியன் @jallikattu_2017 ... அதனால் அவர் மீது புகார் கொடுங்கள் என கொளுத்திப் போட்டார்.

ரணகளம்

ரணகளம்

இப்போது செம்பியன் @jallikattu_2017 ஆதரவாளர்கள் ஒரு பக்கமும் ராதிகாவின் ஆதரவாளர்கள் ஒருபக்கமுமாக ட்விட்டரில் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பஞ்சாயத்து எங்க போய் முடியுமோ?

ஏற்கனவே சிக்கல்

ஏற்கனவே சிக்கல்

அண்மையில்தான் ராதிகாவின் ராடான் நிறுவனம் ரூ5 கோடி வரி ஏய்ப்பு செய்தது அம்பலமானது. இதை தாம் கட்டிவிடுவதாக கூறியிருக்கிறார். இன்றும் கூட ராதிகா கணவர் சரத்குமார் ஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இந்த நிலையில் ராதிகா ட்விட்டரில் அக்கப்போர் நடத்திக் கொண்டிருக்கிறார்.

குஷ்புவும் இப்படித்தான்

குஷ்புவும் இப்படித்தான்

இதேபோல் நடிகை குஷ்புவை வலைதள வாசி விமர்சித்திருந்தார். இதற்கு அந்த வலைதளவாசியின் குடும்பத்தையே சந்திக்கு இழுத்து வந்துவிட்டார் குஷ்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+