'ராகிங்'கில் பாதிக்கப்பட்ட மாணவி: வேறு பள்ளிக்கு மாறுதல் கேட்டு தந்தையுடன் தர்ணா
கரூர் : ராகிங் கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி வேறொரு பள்ளியில் சேர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தந்தையுடன் கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பட்டாபி. டிஎன்பிஎல் ஆலை ஊழியர். இவரது மகள் ஜனனி(16) இவர் மண்மங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 சேர்ந்து விடுதியில் தங்கி படித்து வந்தார்.

கடந்த மாதம் 6ம் தேதி விடுதிக்கு வந்த மாணவியை, சில மாணவிகள் ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனதளவில் பாதிப்படைந்த ஜனனி, தந்தையை வரவழைத்து விடுதியை விட்டு சென்றதோடு, வேலாயுதம்பாளையம் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பள்ளி நிர்வாகிகளிடமும் மாணவி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஜனனி புகார் அளித்தார். இதனையடுத்து, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் ராகிங் குறித்து, வாங்கல் மற்றும் வேலாயுதம்பாளையம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
இந்நிலையில், பள்ளிக்கு செல்லாமல் இருந்த மாணவியை தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகத்தினர் டிசியை பெற்றுச் செல்லுமாறு தெரிவித்தனர். பள்ளியில் இருந்து டிசியை பெறும் பட்சத்தில் வேறு பள்ளியில் சேர்ப்பதற்கான ஏற்பாட்டினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தினர் செய்துதர வேண்டும் என முதன்மை கல்வி அலுவலகத்தில் மாணவியின் தந்தை திரும்பவும் மனு கொடுத்திருந்தார்.
ஜனனியின் கல்விக்கு எந்தவித ஏற்பாடும் செய்யப்படாததால், ஜனனி, தந்தை பட்டாபியுடன், நேற்று மதியம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். முதன்மை கல்வி அலுவலர் அங்கு இல்லாததால், அலுவலக அதிகாரிகள், மண்மங்கலம் பள்ளி நிர்வாகிகளிடம் பேசி, டிசி வழங்க ஏற்பாடு செய்தனர். பின்னர் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள மற்றொரு தனியார் பள்ளியில் மாணவி படிக்கவும் ஏற்பாடு செய்வதாக கூறியதையடுத்து மாணவி ஜனனி தந்தையுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications