வெறும் காலுடன் வெள்ளநீரில் நடந்த ராகுல்... ‘ஓட்டு’ படுத்தும் பாடோ?!
சென்னை: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், தமிழகம் வந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டுள்ளார்.
வழக்கத்தை விட இந்தாண்டு வடகிழக்கு பருவமழை மிக கூடுதலாகவே பெய்து வருகிறது. இதனால் தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வலத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களால் இயன்ற நிவாரணப் பொருட்களை அளித்து வருகின்றனர்.

வெள்ள பாதிப்பு...
அந்தவகையில், தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று, நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

நேரில் சந்தித்த ராகுல்...
சென்னையில் ஏற்பட்ட இந்த மழை வெள்ள சேதத்தை பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவரான ராகுல் நேரில் பார்வையிட்டு மக்களிடம் பாராட்டுகளைப் பெற்றார்.

வெறும் காலோடு தண்ணீரில்...
சென்னை முடிச்சூர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை தண்ணீரில் நடந்து சென்றே ராகுல் சந்தித்தார். அப்போது ராகுல் காலில் செருப்புக் கூட அணியவில்லை.

ராகுல் மட்டும் தான்...
நிவாரணப் பொருட்கள் வழங்கிய போது காலில் ஷூ அணிந்திருந்த ராகுல், ஏனோ வெள்ள நீரில் நடந்தபோது வெறுங்காலோடே நடந்தார். அவருடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் உட்பட அனைவரும் காலில் செருப்பு, ஷூ அணிந்திருக்க, ராகுல் மட்டும் ஏனோ வெறுங்காலுடனேயே நடந்தார்.

பீதி...
டெல்லியில் பிறந்து ராஜ வாழ்க்கை வாழ்ந்த ராகுல், பாதிக்கப்பட்ட மக்களின் துயரை நேரில் உணர்ந்து பார்க்கவே இவ்வாறு நடந்ததாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, ராகுலின் இந்த நடவடிக்கை தமிழக கட்சித் தலைவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் மற்றவர்களும்...
ஏற்கனவே சில கட்சித் தலைவர்கள் களத்தில் இறங்கி நேரடியாக மீட்புப் பணியில் ஈடுபட்ட போதும், ராகுலின் இந்த செயலைப் பார்த்து விரைவில் பெரிய தலைவர்களும் வெள்ள நீரில் கால் நனைப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஓட்டுக்காக...
இது ஒருபுறம் இருக்க, ‘எல்லாம் இந்த ஓட்டு செய்யுற வேலைப்பா..' என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. பாதம் நனையும் அளவே உள்ள தண்ணீரில், பேண்டை மடித்துக் கொண்டு செருப்பு போடாமல் ராகுல் நடப்பது வரும் சட்டசபைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தான் என்கிறார்கள் விமர்சகர்கள்.
எது எப்படியோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது நல்லது நடந்தால் சரி....
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications