சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை சந்தித்தார் ராகுல்காந்தி!

திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் கருணாநிதியை சந்தித்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாள் மற்றும் வைரவிழா சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 Rahul gandhi meets DMK leader Karunanidhi in his Gopalapuram house and wishes him for his birthday

இதைத்தொடர்ந்து 2வது நாளாக சென்னை கிண்டியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தங்கியிருந்தார். காலை முதலே கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின்ன கோபாலபுரத்து வீட்டுக்கு சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ஸ்டாலின், கருணாநிதிக்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் கருணாநிதியை சந்தித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் நேற்று நடைபெற்ற வைரவிழாவில் கருணாநிதி பங்கேற்கவில்லை. இதனால் அவரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கருணாநிதி மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ராகுல்காந்தி அவரை சந்தித்தார். இதைத்தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்தில் முதன்முறையாக கருணாநிதியை சந்தித்துள்ளார் ராகுல் காந்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+