கருணாநிதியை பார்த்து ஹலோ சொன்னேன்... விரைவில் வீடு திரும்புவார்- ராகுல்காந்தி
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை இரவு முதல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரல் தொற்று, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கருணாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள காவேரி மருத்துவமனை, கருணாநிதிக்கு தொண்டை, நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள மூச்சுத் திணறலை சரி செய்ய ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. கருணாநிதிக்கு நோய்த் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன என கூறியுள்ளது.

இந்த நிலையில் இன்று காலையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். காவேரி மருத்துவமனைக்கு வந்த ராகுல் காந்தி, மருத்துவர்களிடம் கருணாநிதி நலம் குறித்து கேட்டறிந்தார். கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ராகுல்காந்தியுடன் திக் விஜய் சிங், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் காவேரி மருத்துமனைக்கு வந்தனர். தமிழக தலைவர்களான திருநாவுக்கரசர், இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்களும் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர்.
Doctors say that he (Karunanidhi) will go home pretty soon. I said hello to him, Congress president has also sent her regards: Rahul Gandhi pic.twitter.com/q9JhiqwWsQ
— ANI (@ANI_news) December 17, 2016
15 நிமிடங்களுக்குப் பின்னர் மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, கருணாநிதி நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவரை நேரில் சந்தித்து ஹலோ சொன்னேன். தமிழ்நாடு, தமிழக மக்கள் தலைவர் கருணாநிதி. அவர் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன்.
அவர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார். பின்னர் ராகுல்காந்தி, விமான நிலையம் சென்று டெல்லி திரும்பினார். ராகுல்காந்தியின் சென்னை பயணம் ஒருமணி நேரத்தில் முடிவடைந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications