மதுரையில் ராகுல்- ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம்! கோவையில் கனிமொழி, சென்னையில் அன்பழகன்!
சென்னை: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை தந்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுலுடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். சென்னையில் திமுக பொதுச்செயலர் அன்பழகனும் கோவையில் திமுக எம்.பி கனிமொழி ஆகியோரும் ராகுலுடன் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன. தற்போது தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகத்துக்கு வருகை தந்துள்ளார்.
மதுரை பொதுக்கூட்டத்தில் ராகுலுடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றார். பின்னர் கோவைக்கு சென்ற ராகுல் காந்தி, வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக,காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இதில் திமுக சார்பில் அக்கட்சியின் மகளிரணி செயலாளரான கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார்.
இந்த கூட்டங்களைத் தொடர்ந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த அவர் மதுரவாயல் கேபிஎன் திருமண மண்டபம் அருகே உள்ள மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மதுரவாயல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நாசே ஆர். ராஜேஷை ஆதரித்து பிரசாரம் செய்தார். இதில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் பங்கேற்றார்.
அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், 93 வயதிலும் மக்களுக்காக திமுக தலைவர் கருணாநிதி போராடுவதாக கூறினார். மேலும், அதிமுக அரசால் வழங்கப்பட்ட இலவச பொருட்கள் அனைத்தும் தரமற்றவை என தெரிவித்தார்.
ரூ.5000 மதிப்புள்ள இலவச பொருட்களை கொடுத்துவிட்டு ஆண்டுக்கு ரூ. 60 ஆயிரத்தை ஜெயலலிதா பறித்துக்கொண்டதாக குற்றம் சாட்டிய ராகுல், தமிழ்நாட்டில் மதுக்கடைகளின் எண்ணிக்கை உயர்த்தியது தான் ஜெலலிதாவின் சாதனை. சென்னை வெள்ளத்தின் போது ஜெயலலிதா மக்களை சந்திக்கவில்லை .
மதிய உணவு திட்டத்தை ஆரம்பிக்க காமராஜர் அதிகாரிகளிடம் ஆலோசிக்கவில்லை. காமராஜர் தொடங்கிய மதிய உணவுத் திட்டம் இன்று நாடு முழுவதும் பரவியுள்ளது என்றார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?











Click it and Unblock the Notifications