வெள்ள பாதிப்பை பார்வையிட வந்த ராகுலை 'மலர்தூவி' வரவேற்ற புதுவை காங்கிரஸ்... கடுப்பான மக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை/புதுவை: தமிழகம் மற்றும் புதுவையில் பெரும் மழை ஏற்பட்டு பயங்கரமான சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த துயரமான சூழலில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை ஏதோ திருமண வீட்டுக்கு வருபவர்களை வரவேற்பது போல புதுவை காங்கிரசார் மலர் தூவி வரவேற்றது மக்களை கடும் கோபத்துக்குள்ளாக்கியது.

வரலாறு காணாத மழை வெள்ளம் சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளை புரட்டிப் போட்டுள்ளது. சென்னையில் ஏற்பட்ட இந்த மழை வெள்ள சேதத்தை பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட இன்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்துள்ளார்.

மலர்தூவி வரவேற்பு

மலர்தூவி வரவேற்பு

சென்னை வந்த ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்றார். அவர் காரில் சென்று ரோடியார்பேட்டை, ரியான்குப்பம், கிரம்பாக்கம் உள்ளிட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். அப்போது ராகுல் காந்தியை காங்கிரசார் மலர் தூவி வரவேற்றனர்.

இழவு வீடாக காட்சியளிக்கும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இப்படியா காங்கிரசார் மலர்தூவி வரவேற்பது என கொந்தளித்து போயினர் அப்பகுதி மக்கள். பின்னர் ரேடியோ மில் ரயில்வே கேட் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார் ராகுல்.

அரசியலை ஒதுக்குங்க

அரசியலை ஒதுக்குங்க

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், வெள்ளத்தால் எவ்வளவு மோசமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பார்வையிடவே இங்கு வந்தேன். தற்போது அரசியலைவிட இதுதான் முக்கியமானது. தமிழகம் மற்றும் புதுவை மக்களின் துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம் என்றார்.

கடலூரில்

கடலூரில்

தொடர்ந்து கடலூரில் காரைக்காடு பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளையும் அவர் பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார். மாணவர்களையும் ராகுல் காந்தி சந்தித்து உரையாடினார்.

சென்னையில்....

சென்னையில்....

இதன் பின்னர் சென்னை வந்த அவர் மேற்கு தாம்பரம், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பை நேரில் பார்வையிட்டார். முடிச்சூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை ராகுல் வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+