கருணாநிதி உடல்நிலை: ’தமிழக மக்களைப் போலவே அவர் உறுதியானவர்’ - ராகுல்
உடல்நலமின்றி சிகிச்சைபெற்றுவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அவரது உடல்நலம் சீராக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஒரு வாரமாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் உடல்நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டதால் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் காவிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போதிலிருந்து அவரது உடல்நிலை ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது.
இந்த நிலையில், அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை நான்கு மணியளவில் சென்னை வந்தார். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி ஆகியோருடன் காவிரி மருத்துவமனைக்குச் சென்ற அவர், கருணாநிதியை பார்த்தார்.
அதற்குப் பிறகு மு.க. ஸ்டாலின், கனிமொழி ஆகியோரைச் சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "நான் கருணாநிதியை பார்க்க விரும்பினேன். அவருக்கு ஆதரவைத் தெரிவிக்க விரும்பினேன். எங்களுக்குக் கருணாநிதியுடன் நீண்ட கால உறவு இருக்கிறது. ஆகவே அவரை நான் பார்க்க வந்திருக்கிறேன். அவர் நன்றாக குணமடைந்து வருவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் மிக உறுதியாக இருக்கிறார். உடல்நிலை சீராக இருக்கிறது" என்று தெரிவித்தார்.
- கருணாநிதி: நள்ளிரவை உலுக்கிய "எங்கள் தலைவா எழுந்து வா" முழக்கம்
- கருணாநிதிக்காக காத்திருக்கும் கடலை வியாபாரி
கருணாநிதியை நேரில் பார்த்தீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "ஆமாம் அவரை நேரில் பார்த்தேன். தமிழக மக்களைப் போலவே அவர் மிகவும் உறுதியானவர். சோனியா தனது ஆதரவை அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கச் சொன்னார்" என்றும் ராகுல்காந்தி கூறினார்.
https://www.facebook.com/BBCnewsTamil/videos/10155381189910163/
கருணாநிதி சிகிச்சைபெற்றுவரும் மருத்துவமனை முன்பாக இன்று நான்காவது நாளாகவும் தொண்டர்கள் கூடியிருந்து "எழுந்து வா.. எழுந்து வா" என்ற முழக்கத்தை தொடர்ந்து எழுப்பிவருகின்றனர். அங்கு வைக்கப்பட்டிருக்கும் பதாகை ஒன்றில், கருணாநிதி நலம் பெற வாழ்த்தி, கையெழுத்திட்டும் வருகின்றனர்.
கருணாநிதியின் உடல்நலம் குறித்து, ஞாயிற்றுக்கிழமை இரவுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து அறிக்கைகள் ஏதும் வெளியாகவில்லை. அன்று மாலையில், அவரது உடல்நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டு, பிறகு மீண்டார்.
பிற செய்திகள்:
- வட கொரியா புதிய ஏவுகணை தயாரிக்கிறதா?
- 'இரான் தலைவரை நேருக்கு நேர் சந்திக்கத் தயார்' - டிரம்ப் : என்ன சொன்னது இரான்?
- 50 வயதுக்கு மேல் குழந்தை பெற்றால் என்ன தவறு? - கேள்வி எழுப்பும் நடிகை
- டாக்டர் முத்துலட்சுமி: சாதி எல்லைகளைக் கடந்து சாதித்தவை எவை?














Click it and Unblock the Notifications