கஸானா நகைக்கடை நில விவகாரம்... ஈவிகேஎஸ் சகோதரர் வீட்டில் ஐடி ரெய்டு
சென்னை: தனியார் நகைக்கடைக்கு நிலம் விற்றது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் சகோதரர் மதிவாணன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனியார் நகைக்கடையான கஸானா குழுமத்திற்கு சொந்தமான நகைக்கடைகள் மற்றும் நிறுவனங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. கஸானா குழும நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடமாக வருமான வரி கட்டவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

அப்போது கிடைத்த ஒரு ஆவணத்தின் படி, அந்த குழுமத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் சகோதரர் மதிவாணன் நிலத்தை விற்றது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்றிரவு அண்ணாநகரில் உள்ள மதிவாணன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோதனையின் போது ஏதேனும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து தகவல்கள் இல்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications