கிருஷ்ணகிரியில் தொடரும் அதிரடி... மீண்டும் ஒரு தனியார் பள்ளியில் தேர்தல் அதிகாரிகள் சோதனை
கிருஷ்ணகிரி: வாக்காளர்களுக்கு தருவதற்காக பணம் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளி ஒன்றில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூரில் தனியார் கிரீன்வெளி சி.பி.எஸ்.இ. மெட்ரிக்குலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் நடத்தி வரும் இந்தப் பள்ளியில், வாக்காளர்களுக்கு தருவதற்காக கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நேற்றிரவு வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட வருமான வரிதுறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை 8 மணியளவில் அந்த தனியார் பள்ளிக்குள் அதிரடியாக நுழைந்தனர்.
இதையடுத்து பள்ளிக்குள் யாரையும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பள்ளியில் முன்பக்க கிரீல் கதவு மூடப்பட்டது. மேலும் பள்ளிக்கு வெளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. பள்ளியின் ஒவ்வொரு அறைகளிலும் அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
நீண்ட நேரமாக சோதனை நடந்து வருவதால் இப்பள்ளியில் கட்டுக்கட்டாக பணம் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரியில் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் ரூ. 3 கோடியே 39 லசம் ரூபாய் மற்றும் 245 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றில் இதில் உரிய ஆவணங்கள் காட்டியது போக மீதமுள்ள ரூ. 2 கோடியே 75 லட்சம் பணத்தை வருமான வரிதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள ஸ்டேட் வங்கியில் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications