இலங்கை அரசைக் கண்டித்து புதுவையில் ரயில் மறியல்... இலங்கை தூதரை வெளியேற்ற கோரிக்கை
தமிழக மீனவர் மீதான துப்பாக்கிச் சூட்டை கண்டித்து புதுச்சேரியில் மீனவர் விடுதலை வேங்கை அமைப்பினர் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டை கண்டித்து புதுச்சேரியில் மீனவர் விடுதலை வேங்கை அமைப்பினர் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீதி இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்துவிட்டார். இலங்கை அரசைக் கண்டித்து புதுச்சேரியில் மீனவர் விடுதலை வேங்கை அமைப்பினர் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தமிழக மீனவர்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டிக்கிறோம். தமிழகத்தில் உள்ள இலங்கைத் தூதரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications