23 மில்லியன் பயணிகள்… 23 பில்லியன் வருமானம்: இந்திய ரயில்வே ஒரு பார்வை
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்தியன் ரயில்வே 12,617 ரயில் வண்டிகள் வழியாக 23 மில்லியன் பயணிகளை ஒவ்வொரு நாளும் பயணிக்க வைக்கிறது. இது ஆஸ்திரேலியா நாட்டின் மக்கள் தொகைக்கு சமமானது. இந்த வண்டிகள் 7,172 நிலையங்களை இணைக்கின்றன.
மூன்று மில்லியன் டன் சரக்கும் இந்தியன் ரயில்வே 7,421 வண்டிகளின் மூலமாக ஒவ்வொரு நாளும் கொண்டு செல்கின்றன.

இந்தியாவில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் மொத்த நீளம் 1.16 லட்சம் கிலோ மீட்டர், ரயில்வே பெட்டிகளின் மொத்த எண்ணிக்கை 63870, ரயில்வே தொழிலாளர்களின் எண்ணிக்கை 13.1 லட்சம்.
- தற்போது செயல்பாட்டில் உள்ள, 359 முக்கிய ரயில்வே திட்டங்களை முடிக்கவே, 1.82 லட்சம் கோடி ரூபாய் தேவை. இந்த, 359 திட்டங்களில், 113 திட்டங்கள், புதிய ரயில் பாதைகள் அமைப்பது, மீட்டர் கேஜ் பாதைகளை, அகல ரயில் பாதைகளாக மாற்றுவது, இரட்டை ரயில் பாதைகள் திட்டம் போன்றவை.
- கடந்த 30 ஆண்டுகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 676 திட்டங்களில் இது வரை 317 திட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றியுள்ள திட்டங்களின் மதிப்பு மட்டும் 1.58 லட்சம் கோடி ரூபாயாகும்.
- நிலக்கரி,உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட சரக்குப் பொருட்கள் மட்டும் ஒரு நாளைக்கு 2.65 மில்லியன் டன் ரயில்வே துறையால் கையாளப்படுகிறது.
- சரக்கு கட்டணங்களில் இருந்து கிடைக்கும் வருவாயை வைத்து, பயணிகளுக்கான கட்டண மானியத்தால் ரயில்வே துறைக்கு ஆண்டொன்றுக்கு 26000 கோடி ரூபாய் இழப்பை ஈடு செய்கிறது மத்திய அரசு
- ரயில்வே துறை தனது வருவாயில் ஒரு ரூபாயில் எரிபொருள், ஊதியம், பென்சன், பராமரிப்பு போன்ற செலவுகளுக்கு 94 பைசா செலவாகிறது. ஆறு பைசா மட்டும்தான் மீதியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் ஆண்டுதோறும் 200 கி.மீ தூரத்திற்கு கூடுதல் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஒட்டுமொத்தமாக உள்ள 64,460 கி.மீ ரெயில் பாதையில், கடந்த 67 வருடங்களில் 13000 கி.மீ தூரத்திற்கு ரயில் பாதைகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. இது உலகின் 4 ஆ வது மிகப்பெரிய ரயில்பாதையாகும்.எனினும் சீனாவின் 1 லட்சம் கி.மீ ரயில் பாதையை விட மிகக்குறைவானதாகும்.
- மக்கள் சேவைக்காக 13.1 லட்சம் ஊழியர்களுடன் நாட்டிலேயே அதிக ஊழியர்களை கொண்ட முதல் துறையாக ரயில்வே துறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications