ஜூலை 11 முதல் ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்தம்.. தொழிற்சங்கம் அறிவிப்பு: போக்குவரத்து பாதிக்க வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திட்டமிட்டபடி ஜூலை 11ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என தெற்கு ரயில்வேயின் எஸ்ஆர்எம்யு தொழிற்சங்க பொதுச்செயலாளர் கண்ணையா உறுதி தெரிவித்துள்ளார்.

36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் வருகிற ஜூலை 11ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபவுள்ளனர். ரயில்வே ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும், ரயில்வே துறையில் தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிடுதல் என்ற அம்சங்களும் இதில் உள்ளது.

Railway employees will enter in to protest from July 11

எனவே ரயில்வேத் துறையும் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளது. பல மாநிலங்களில் நடந்த தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த இந்த போராட்டம், வருகிற ஜூலை 11ம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது.

தெற்கு ரயில்வேயின் எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்க பொதுச்செயலாளர் கண்ணையா இன்று இதை உறுதி செய்தார்.

போராட்டம் நடந்தால் ரயில்சேவை, சரக்கு போக்குவரத்து உள்ளிட்டவைகள் கடுமையாக பாதிக்கும் வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+