ரெடியா இருங்க மக்களே.. ரெட்டேரி - மாதவரம் இடையே மெட்ரோ ரயில் வருது.. எப்போ தெரியுமா.. ஸ்வீட் நியூஸ்
சென்னை: மாதவரம்-ரெட்டேரி சந்திப்பு இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வரும்நிலையில், அதுகுறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
சென்னை, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில், மெட்ரோ ரயில் மேம்பால பாதைக்காக, துாண்கள் அமைக்கும் பணிகள் வேகமெடுத்து வருகின்றன..
சென்னையில் இரண்டாவது கட்டமாக மூன்று வழித்தடங்களில் 118.9 கிமீ துாரத்திற்கு 61 ஆயிரத்து 843 கோடி ரூபாயில், மெட்ரோ திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

மாதவரம்: இதில், சோழிங்கநல்லுார் - மாதவரம் தடத்தில் 47 கிமீ துாரத்திற்கு அமைகிறது. மொத்தம் 46 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த தடத்தில் பெரும்பாலும், உயர்மட்ட பாதையில் ரயில் பாதை அமைக்கப்படுகிறது.. மாதவரம், ரெட்டேரி, அண்ணா நகர் பகுதிகளில், ஏகப்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் மேம்பால பாதையில் பாலம் அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன..
அதேபோல, கோயம்பேடு மார்க்கெட், சாய்நகரில் இருந்து ஆழ்வார் திருநகர் வரை, மேம்பால பாதைக்காக, தூண்கள் அமைக்கும் பணிகளும் வேகம் எடுத்து வருகின்றன. மேலும், மாதவரம்-சிறுசேரி, மாதவரம்-சோழிங்கநல்லூர், பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் பூந்தமல்லி முதல் பவர் ஹவுஸ் வரை முதலில் ரெயில் சேவைகள் தொடங்கும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறியிருந்தது..
துரித பணி: அதன்படி பூந்தமல்லி- போரூர் இடையேயான பாதையை வரும் 2025-ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, போரூர்-பவர் ஹவுஸ் இடையேயான பாதையை 2026-ம் ஆண்டிற்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த பகுதியிலும் பணிகள் துரிதமாகி வருகின்றன. இந்த நிலையில் மாதவரம் -ரெட்டேரி சந்திப்பு இடையேயான மெட்ரோ ரெயில் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் சொல்லும்போது, 2026-ம் ஆண்டுக்குள், மாதவரம்-ரெட்டேரி சந்திப்பு இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. மாதவரம்-ரெட்டேரி சந்திப்பு இடையே மெட்ரோ ரெயில் இயக்கப்படும். இதற்காக இதுவரை 65 தூண்கள் கட்டப்பட்டு உள்ளன. மாதவரம் டெப்போ மெட்ரோ, அசிசி நகர், மஞ்சம்பாக்கம், வேல் முருகன் நகர், ரெட்டேரி சந்திப்பு ஆகிய 7 இடங்களில் ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது.
மஞ்சம்பாக்கம்: இதன்மூலம் மாதவரம், மஞ்சம்பாக்கம், ரெட்டேரி போன்ற வடக்கு பகுதியில் வசிப்பவர்கள் இன்னும் 3 வருடங்களில் மெட்ரோ ரெயிலில் பயணிக்க முடியும். இந்த பயண தொலைவு 11 கிலோ மீட்டர் ஆகும். மாதவரம் டெப்போ மெட்ரோ சுரங்க ரெயில் நிலையமாக இருக்கும். மீதமுள்ள ரெயில் நிலையங்கள் உயர்த்தப்பட்ட பாதை ரெயில் நிலையங்களாக இருக்கும். மாதவரம் டெப்போவில் ரெயில்கள் நிறுத்தப்பட்டு பராமரிக்கப்படும்" என்று கூறினார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications