மீண்டும் த.மா.கா உதயம்... மீண்டும் அதே சைக்கிள் சின்னம்- திருச்சியில் ஜி.கே.வாசன் அறிவிப்பு
திருச்சி: திருச்சியில் பெய்துவரும் தொடர் அடை மழையிலும் இன்று வாசனின் புதிய கட்சி அறிவிப்பு பொதுக்கூட்டம் சொன்னபடி தொடங்கியுள்ளது. 32 அடி உயர கொடிக்கம்பத்தில் புதிய கொடியை தியாகி அருணாசலம் ஏற்றி வைத்தார்.
மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய ஜி.கே.வாசன் தனது கட்சியின் பெயர் தமிழ் மாநில காங்கிரஸ் என்றும், கட்சியின் சின்னம் சைக்கிள் என்றும் கூறினார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து 1996ஆம் ஆண்டு மூப்பனார் பிரிந்த போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி என்றுதான் பெயரிடப்பட்டது. கட்சியின் சின்னமாக சைக்கிள்தான் இருந்தது.

மூப்பனார் மறைவிற்குப் பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார் ஜி.கே.வாசன். 10 ஆண்டுகள் மத்திய அமைச்சராகவும் இருந்த அவர், காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த மாதம் விலகி புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார்.
கட்சியின் துவக்க விழா பொதுக்கூட்டம் நவம்பர் 28ல் திருச்சியில் நடைபெறுவதாக அறிவித்ததோடு இதற்காக பொன்மலை, ஜி.கார்னர் மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

விழாநாளான இன்று காலையிலிருந்தே விடாது மழைபெய்து கொண்டே இருக்கிறது. தொடர் மழையால் திருச்சி ஜி.கார்னர் மைதானம் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. மழையால் மாநாட்டுப்பந்தல் மிதக்கிறது. மாநாடு நடைபெறும் இடம் உழுத நிலம் போல மாறிவிட்டது.

திருச்சின் முக்கிய சாலைகள் நெடுகிலும் பேனர்கள், தோரணங்கள், கட்சி கொடிகள் கட்டப்பட்டு திருவிழா போல் காட்சி அளிக்கிறது. ஆனால் மழை விடாது தொடர்ந்து பெய்துகொண்டே உள்ளது. இதனால் மாநாடு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனாலும் தமிழகம் முழுவதிலும் இருந்தும் தொண்டர்கள் குவிந்தனர்.
விழா 3 மணிக்கு துவங்கும் என்று கூறப்பட்ட நிலையில் மழை காரணமாக 5 மணிக்கு தொடங்கியது. தனது புதிய கட்சியின் கொடியை வாசன் ஏற்றிவைத்தார்.

பின்னர் பேசிய ஜி.கே.வாசன் தனது கட்சியின் பெயர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி என்றும் கட்சியின் சின்னம் சைக்கிள் என்றும் அறிவித்தார்.
புதிய கட்சியின் அறிவிப்பு, முதல் கூட்டம் என்பதால் வாசன் ஆதரவு தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்றுள்ளனர். மழை பெய்த நிலையிலும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், குறிப்பாக அதிக அளவில் இளைஞர்களும் பங்கேற்றுள்ளனர்.

மீண்டும் தமிழ்நாட்டில் வாசனின் சைக்கிள் றெக்கை கட்டி பறக்கப்போகிறது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். பொருத்திருந்து பார்ப்போம்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications