வெயிலால் அவதிப்பட்ட மக்களுக்கு நிம்மதி.. சென்னையில் திடீர் மழை.. என்ன ஒரு காத்தோட்டம்!
சென்னையின் பல பகுதிகளில் மழையுடன் குளிர் காற்றும் வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: சென்னையின் பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. குளிர் காற்றும் வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காற்று மண்டல கீழடுக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அடுத்த 3 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று கூறினார். மேலும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவர் சொன்னது போன்றே, சென்னையின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையின் முக்கிய பகுதியான வேப்பேரி, புரசைவாக்கம், எழும்பூர், தியாகராயர் நகர் உள்ளிட்ட இடங்களில் மாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
மேலும், ராயப்பேட்டை, ராயபுரம், சிந்தாதிரிபேட்டை, தண்டையார்பேட்டை, அண்ணா சாலை, பாரிமுனை, நுங்கம்பாக்கம், மந்தவெளி, பட்டினப்பாக்கம், எம்ஆர்சி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதேப் போன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், சோழவரம், செங்குன்றம், புழல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்கிறது.
அடித்த வெயிலுக்கு இதமாக பெய்யும் இந்த மழையால் மக்கள் புழுக்கம் தீர்ந்து மக்கள் குஷியாகியுள்ளனர்.
-
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications