சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
லட்சத்தீவு அருகே உருவாயிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகம், புதுச்சேரியில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் மேற்கு மாம்பலம், அம்பத்தூர், நுங்கம்பாக்கம், சூளைமேடு, சென்ட்ரல், எழும்பூர்,கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை இரவில் மழை பெய்தது.
அதேபோல் திருச்சி, மணச்சநல்லூர், கோவை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், ஈரோடு, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், ரம்பியூர், திண்டுக்கல், கொடைக்கானல், மேல்மலை, கீழ்மலை, ஊட்டி, மேட்டுபாளையம்,குன்னூர், விழுப்புரம், தருமபுரி,விருதுநகர்,தேனி மற்றும் புதுச்சேரியிலும் மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications