3 நாட்களுக்கு சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நீடிப்பதால் 3 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கத்தை விட இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து கொண்டிருக்கிறது. தொடர் கனமழையால் சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளது. மழை எப்போது குறையும், மீண்டும் எப்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பப் போகிறோம் என்ற ஏக்கம் எல்லோர் முகத்திலும் வெளிப்படையாகவே தெரிகிறது.

இந்நிலையில், குமரி கடல் பகுதியில் நேற்று முன்தினம் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிக்கு சென்றுள்ளது. புதிதாக நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுநிலை தமிழ்நாடு அருகே உள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று அனேக இடங்களில் மழை பெய்தது. மேலும், அடுத்த 3 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை அல்லது மிக கனமழை பெய்யும். தமிழகத்தின் அனேக இடங்களில் மழை பெய்யும்.
இந்த காற்றழுத்தம் காரணமாக நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என பிபிசியின் வானிலை செய்திகள் தெரிவித்துள்ளது.
இன்னும் வெள்ள பாதிப்பில் இருந்து மீளாத மக்கள் மீண்டும் கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கையால் பீதிக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் கடந்த சில நாட்களாக மழையளவு குறைந்து, வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது. மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைத் திரும்பி வருகிறது. இந்த சூழ்நிலையில் மீண்டும் கனமழை என்ற அறிவிப்பு சென்னை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
பாபநாசத்தில் 130 மிமீ மழை பெய்துள்ளது. சோழவரம் 70 மிமீ, பட்டுக்கோட்டை, தாமரைப்பாக்கம், சத்திரப்பட்டி, திருவள்ளூர், திருவாலங்காடு, மதுக்கூர், வேதாரண்யம் 60 மிமீ, செங்குன்றம், பழனி, பூண்டி, அதிராம்பட்டினம், வேடச்சந்தூர், பூந்தமல்லி, திண்டுக்கல், மணப்பாறை, பொன்னேரி, உடுமலைப் பேட்டை 50 மிமீ, காமாட்சிபுரம், ராதாபுரம், மணல்மேல்குடி, புழல், மணிமுத்தாறு, செம்பரம்பாக்கம், முத்துப்பேட்டை, மாதவரம், சென்னை டிஜிபி அலுவலகம், சென்னை விமான நிலையம், திருமயம், ராமேஸ்வரம், தாம்பரம், சிதம்பரம், வடசென்னை 30 மிமீ மழை பெய்துள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications