இன்னும் 24 மணி நேரத்தில்.. தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்!
சென்னை: வட தமிழகத்தின் அனேக இடங்களிலும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தென் தமிழகம் மற்றும் கன்னியாகுமரி கடலை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்தார்.

இதனால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மன்னார்குடியில் 12 செ.மீ மழையும், உத்தரமேரூர், வாணியம்பாடியில் தலா 11 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் அனேக இடங்களிலும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை இருக்கும். அடுத்த 2 நாளுக்கு மழை நீடிக்கும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டததுடன் காணப்படும். ஓரிரு முறை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 30 வரையில், பெய்த தென்மேற்கு பருவமழையின் அளவு மழை 206 மி.மீ ஆகும். இயல்பான அளவு 204 மி.மீ ஆகும். இது இயல்பை விட 1 சதவீதம் அதிகம் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications