அரபிக் கடலில் மேலடுக்கு சுழற்சி- தமிழக தென்மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அறிக்கையில், "தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விடைபெற்றாலும் தற்போது அந்தமான் அருகே அரபிக்கடலில் புதிதாக மேலடுக்கு சுழற்சி ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களில் இன்று முதல் 4 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இடி, மின்னலுடன் கூடிய மழையையும் எதிர்பார்க்கலாம். கனமழைக்கு வாய்ப்பு இல்லை. சென்னையில் வறண்ட வானிலை நிலவும். அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் வடமாவட்டங்களிலும் வறண்ட வானிலையே நிலவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications