தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு... ஒரு வாரத்தில் பனி குறையும்- வானிலை மையம்
தமிழகம் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பனி குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடற்கரையில் நிலவும் மேலடுக்கு சூழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் இறுதியில் வடகிழக்குப் பருவமழைக்காலம் முடிந்த பின்னர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே பனி காலம் துவங்கியுள்ளது. 8 மணிவரைக்கும் சூரியனை பார்ப்பது அரிதாக உள்ளது. சென்னை புறநகரில் மூடுபனியால் விமானங்கள் புறப்படுவதிலும் தரையிறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாகவே பனியின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. ஊரே ஏசி போட்டது போல குளிருவதால் வீட்டிற்குள் ஃபேன் போடாமல் மின்சார செலவும் மிச்சமாகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் குறைவான வெப்பநிலை நிலவும். பனி ஒருவாரத்தில் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளது: தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் குறைவான வெப்பநிலை நிலவும். சென்னை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 19 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் மூடுபனி இருக்கும். சென்னை, நீலகிரியில் அதிகமான மூடுபனிக்கு வாய்ப்புள்ளது. இன்னும் ஒருவாரத்தில் பனி படிப்படியாக குறையும் என தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடற்கரையில் நிலவும் மேலடுக்கு சூழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications