சென்னையை 4வது நாளாக மாலையில் குளிப்பாட்டிய மழை!
சென்னை: சென்னையில் கடந்த சில தினங்களை போலவே, தொடர்ந்து இன்று மாலையும் மழை பெய்தது.
கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மிதமான மழை சென்னையை குளிப்பாட்டிச் செல்கிறது. இன்றும், அதேபோல மாலை 6.30 மணியளவில் தொடங்கி, நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

நகரின், கிண்டி, வடபழனி, வளசரவாக்கம், ராமாவரம், சைதாப்பேட்டை, தி.நகர், அடையாறு, வேளச்சேரி, ஈக்காடுந்தாங்கல், ஆழ்வார்பேட்டை, மடிப்பாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்தது.

இதமான காற்று காரணமாக குளுமையான தட்பவெப்பம் நிலவியது. விடாமல் மழை பெய்ததால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
4வது நாளாக மாலை நேரத்தில் மட்டும் பெய்த இந்த தொடர் மழையால் மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
அதேநேரம், மாலையில் அலுவகம், பள்ளி, கல்லூரி முடித்து வீடு திரும்புவோர் இதனால் அவதிப்பட்டனர்.
சென்னையில் இடியுடன் வெளுத்து வாங்கும் மழை.. பல இடங்களில் டிராபிக் நெரிசல் #chennairains pic.twitter.com/6j7FzaL5RR
— Oneindia Tamil (@thatsTamil) July 13, 2018
காசி திரையரங்கம், திரு வி.க.இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், உதயம் தியேட்டர், வட பழனி கமலா தியேட்டர், செம்மொழி பூங்கா முதல் எம்.ஓ.பி வைண்ஷவ் பெண்கள் கல்லூரி பகுதி, அடையாறு இந்திராநகர் முதல் துரைப்பாக்கம் வரையிலான சாலைகளில் போக்குவரத்து விழி பிதுங்கியது. இதனிடையே இரவு 7.15 மணிக்கு மேல் பல பகுதிகளிலும் மழை வெறிக்க துவங்கியது. இதன்பிறகு, போக்குவரத்து, படிப்படியாக மேம்பட்டது.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அடுத்த 3 மணி நேரம்.. விடாமல் கொட்டப் போகுது மழை.. செங்கல்பட்டு உள்பட 16 மாவட்டங்களுக்கு அலர்ட்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications