சென்னை, காஞ்சிபுரத்தில் காற்றோடு ஜில் மழை
சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் காற்றோடு மழை பெய்து வருகிறது.
சென்னை : சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காற்றோடு மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளது.
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

சென்னையில் கடந்த சில நாட்களாக காலையில் வெயிலும், மாலையில் மழையுமாக வானிலை மாறி வருகிறது.
நேற்று மாலையில் மழை பெய்து குளிர்வித்த நிலையில் காலையில் வழக்கம் போல வெயிலடித்தது.
இந்த நிலையில் பிற்பகல் முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் சாரலுடன் மழை பெய்தது.
சென்னை எழும்பூர், கிண்டி, தி.நகர், முகப்பேர், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மாலையில் மழை பெய்தது.
அதேபோல் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சாந்தோம், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல சென்னையின் புறநகர் பகுதிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் காற்றோடு கனமழை பெய்து வருகிறது. மழையின்றி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. தொடர் மழை பெய்தால் மட்டுமே ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பஞ்சம் தீரும் என்பது சென்னைவாசிகளின் கருத்தாகும்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications