சென்னையை சில்லாக்கிய சாரல் மழை.. மக்கள் மகிழ்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பல இடங்களில் சாரல் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெப்பச்சலனம் மற்றும் ஆந்திரா முதல் கன்னியாகுமரி வரை நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை ஆகிய காரணங்களால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதேபோல் சென்னையின் பல இடங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

Rain in many places of Chennai : people happpy

இந்நிலையில் இன்று பிற்பகல் முதல் சென்னையில் சாந்தோம், மந்தைவெளி, போயஸ் கார்டன், தேனாம்பேட்டை, கோபாலபுரம், ஆழ்வார்பேட்டையில் மிதமான மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி மற்றும் சுற்று வட்டார இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பலத்த மழை வருகிறது.

தேவதானப்பட்டி, வடுகபட்டி, மேல்மங்கலம், சில்வார்பட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துள்ளது. இந்த மழையினால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rain occurs in many places of Chennai. Erode, Theni, Vellore also rains. People are delighted by the rains in many places of Tamilnadu.
Please Wait while comments are loading...