நேற்று மழை பெய்தது.. இன்று அனேக இடங்களில் வெயில் அடிக்கிறது.. சென்னையில்!
சென்னை: தமிழகத்தில் இன்று அனேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் நேற்று மழையில் நனைந்த சென்னையில் இன்று அனேக இடங்களில் வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை காலம் டிசம்பர் 31 ம் தேதி வரை உள்ளது. பருவ மழை தொடங்கியது முதல் சிறியதும் பெரியதுமாக மழை பெய்து வந்துள்ள போதிலு் இன்னும் திருப்திகரமான அளவில், போதிய அளவில் மழை இல்லை என்பதுதான் நிதர்சனமாக உள்ளது.

தென் மாவட்டங்களில் நிலைமை பரவாயில்லை. நன்றாக பெய்துள்ளது. ஆனால் வட மாவட்டங்கள்தான் சற்று வறண்டு போயுள்ளன. போதிய அளவில் வழக்கமான அளவில் மழை இல்லை.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், ஆங்காங்கே பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று அதிகாலை மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் நேரத்திலும் சற்று பலத்த மழை பெய்தது.

இந்த நிலையில் தமிழகம்-இலங்கை இடையே வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இன்று தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், சென்னை உள்ளிட்ட வட சென்னை மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், சென்னையின் பல பகுதிகளில் மோடமாக இருந்தாலும் கூட பல இடங்களில் வெயிலும் வந்து வந்து போய்க் கொண்டிருக்கிறது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications