அடுத்த 2 நாளைக்கு சென்னை உள்பட தமிழகத்தை குளிர வைக்கப்போகும் மழை.. வானிலை மையம்
சென்னை: வெப்பச்சலனம் மற்றும் காற்று மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாளுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மக்கள் கடும் வெயில் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வருகிறார்கள். இந்த சூழலில் கடந்த சில தினங்களில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சூழலில் அடுத்த 2 நாளுக்கு சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டத்தின் மலை சார்ந்த பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதேபோல் காஞ்சிபும், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த மழை காரணமாக தமிழகத்தில் வெயில் பல்வேறு இடங்களில் குறைந்துவிடும் என்பதோடு, பல்வேறு பகுதிகள் குளுமையாக மாற வாய்ப்பு உள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications