அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னும் ஓயாத அனல் காற்று... சென்னைவாசிகள் கவலை
அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் சென்னையில் அனல் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.
சென்னை: அக்னி நட்சத்திரம் முடிந்து ஒருவார காலமாகியும் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் அனலின் தாக்கம் ஓயவில்லை. சென்னையில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. திருவள்ளூரில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
கத்திரி வெயில் என்ற அக்னி நட்சத்திரம் முடித்தாலும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. நேற்று வேலூரில் 107.24, திருத்தணியில் 107.06, கடலூரில் 104.54, நாகப்பட்டினம், மதுரையில் 104, கரூர் பரமத்தியில் 103.28, திருச்சியில் 103.1, சென்னையில் 102.92, புதுச்சேரியில் 102.2, பாளையங்கோட்டையில் 101.3, தூத்துக்குடி, காரைக்காலில் 101.12, டிகிரி பதிவாகி மக்களை வாட்டி எடுத்து வருகிறது.

இன்றும் பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவைத் தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. சென்னையில் காலை முதலே அனல் காற்று வீசுவதால் வீட்டை விட்டு வெளியே செல்லவே மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருவள்ளூரில் இன்று 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சென்னையில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வெப்பத்தை தணித்து வரும் நிலையில் சென்னையில் மழைக்கான அறிகுறியே இல்லாமல் இருக்கிறது.
இதனிடையே தென் தமிழகத்தில் அடுத்த சில தினங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
தென் மேற்கு பருவ மழை துவங்கியுள்ளதால் கேரளாவில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தற்போது தென்மேற்கு பருவ காற்று வீசி வருகிறது. அடுத்த 3 நாட்களில் தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகலாம் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியுள்ளார்.
தென் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய அறிக்கை தெரிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications