குற்றாலத்தில் கண்ணாமூச்சி ஆடும் சாரல்: வியாபாரிகள் கலக்கம்
நெல்லை: குற்றாலத்தில் திடீரென சாரல் மாயமானதால் வியாபாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
குற்றாலத்தில் சீசன் கண்ணாமூச்சி காட்டி வந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக சாரல் நன்றாக பெய்தது. குறிப்பாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் குளிக்க தடை விதிக்கும் அளவுக்கு தண்ணீர் ஆர்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரித்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் மீண்டும் தலை காட்டத் துவங்கியுள்ளது. இருப்பினும் மெயினருவி, ஆண்கள், பெண்கள் பகுதியில் தண்ணீர் நன்றாக விழுகிறது. ஐந்தருவியின் ஐந்து பிரிவுகளிலும், பழைய குற்றாலம், புலியருவியில் ஓரளவுக்கு தண்ணீர் விழுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று குளித்து வருகின்றனர்.
கூட்டம் அதிகரித்து வருவதால் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணிக்கு நிறுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். புலியருவி, பழைய குற்றால அருவிகளில் சிலர் விதிமுறைகளை மீறி சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்கின்றனர். ஓரிரு போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருப்பதால் அவர்கள் துணிச்சலாக விதிகளை மீறுகிறார்கள்.
விடுமுறை நாட்களில் காலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க மொபைல் போக்குவரத்து போலீசாரையும், கூடுதல் போலீசாரையும் பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications