கனமழையால் ஈரோடு, திருப்பூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: வெள்ள அபாய எச்சரிக்கை
திருப்பூர்: வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் காரணமாக திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டம் கோபி,சத்தியமங்கலம் தாலுக்காக்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 நாட்களாக, திருப்பூர், அவிநாசி, பல்லடம், காங்கயம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 19ம் தேதி இரவு பெய்த கனமழையால், மாவட்டத்தில் பல இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது; இதையடுத்து, 20ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி, 21 மற்றும் 23ம் தேதிகளில் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது; மழையால், மீண்டும் 25ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
ஞாயிறு இரவு மற்றும் அதிகாலையில் திருப்பூர், பல்லடம், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, நேற்று காலை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி ஆகிய ஐந்து பிளாக்குகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

திருப்பூரில் விடுமுறை
இதனிடையே இன்றும் மழை கொட்டி வருவதால் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் உத்தரவிட்டுள்ளார். வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம்
தருமபுரி மாவட்ட - பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹல்லி, உட்பட நான்கு ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அமராவதி அணை நிரம்பியது
உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதி அணை அதன் முழு கொள்ளளவான 90 அடியை எட்டியது. இதனால் அணையிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஆற்றில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது.

தண்டோரா எச்சரிக்கை
திருப்பூர் மாவட்ட எஸ்பி அமித்குமார் சிங் அமராவதி அணை கரையோரம் உள்ள கொமாரலிங்கம், மடத்துக்குளம், கணியூர் ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நேற்றே தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

45 வீடுகள் சேதம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு நேற்று வரை குன்னூர் தாலுகாவில் மட்டும் 45 வீடுகள் சேதமடைந்ததுடன், 20க்கு மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.

கிருஷ்ணகிரி அணை
கர்நாடக மாநிலத்தில் தென் பெண்ணையாறு நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் முழு கொள்ளளவான 52 அடியில், 51.01 அடிக்கு நீர் எட்டியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் அணையின் கீழ் மதகு வழியாக 1500 கனஅடி தண்ணீர் நேற்று காலை முதல் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தென் பெண்ணையாற்றில் வெள்ளம்
அதேபோல் ஒசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணையில் நீர்மட்டம் 42.5 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடி. அணைக்கு விநாடிக்கு 2120 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் முழுவதும் தென் பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
தென்பெண்ணையாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. இதையடுத்து கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தென்பெண்ணையாற்று கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஆற்றங்கரையோரம் தாழ் வான பகுதியில் வசிக்கும் மக்கள் மேட்டுப்பாங்கான பகுதிக்கு செல்லு மாறு பொதுப் பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அதிகாரிகள் எச்சரிக்கை
தென்பெண்ணையாறு செல்லும் பூதிநத்தம், தொரப்பள்ளி, பேரண் டப்பள்ளி, கோபசந்திரம், பாத்த கோட்டா உள்ளிட்ட கிராமங்களில் உள்ள தரைபாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தரைப்பாலத்தை கடக்க வேண்டாம் என கிராம மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications