இலங்கை அருகே மேல்அடுக்கு சுழற்சி... தென் தமிழகத்தில் மழை நீடிக்கும்!
சென்னை: தென் இலங்கைக்கு அருகே புதிதாக உருவாகி வரும் மேல்அடுக்கு சுழற்சியினால் அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மாதம் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேல்அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தற்போது தென் இலங்கைக்கு அருகே புதிதாக மேல்அடுக்கு சுழற்சி ஒன்று உருவாகி வருகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், "லட்சத்தீவு கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த மேல்அடுக்கு சுழற்சி, வடக்கு நோக்கி நகர்ந்து கர்நாடகம் அருகே அரபிக்கடலில் நிலைகொண்டு அதே இடத்தில் நீடித்து வந்தது. தற்போது அது, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை யாக மாறியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு மேற்கு திசை நோக்கி அது செல்லக்கூடும். இந்த புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இதற்கிடையே, தென் இலங்கைக்கு அருகில் புதிதாக மேல் அடுக்கு சுழற்சி ஒன்று உருவாகி இருக்கிறது. இதன்காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களிலும், வடமாவட்டங் களின் உட்பகுதியில் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்றார்.
புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக அதிகபட்சமாக பெரும்புதூர், தாமரைப்பாக்கம், உத்திரமேரூர் ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது. பூண்டி, முசிறியில் 7, திருவாலங்காடு, வேலூர், பாளையங்கோட்டை, நாங்குநேரியில் 6, ஒசூர், குளித் தலை, திருக்கோவிலூர், கரூர், காவேரிப்பாக்கம், வாலாஜா, சூளகிரி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications