கையில் எப்பவும் குடை வச்சிக்கோங்க... இன்னும் 2 நாளைக்கு மழை நீடிக்குமாம்!
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. லட்சத்தீவு பகுதியில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக குறிப்பாக கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய அதிகாரி கூறுகையில், ‘இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) அதாவது மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்' என்றார்.
நேற்று காலை 8-.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
நாகர்கோவில் 11 செ.மீ., பொன்னேரி 9 செ.மீ., கீரனூர், மைலாடி, வேதாரண்யம், தலா 8 செ.மீ., மயிலாடுதுறை, நன்னிலம் தலா 7 செ.மீ., முத்துப்பேட்டை, பேச்சிப்பாறை, குழித்துறை தலா 6 செ.மீ., கிருஷ்ணகிரி, தொழுதூர், சின்னக்கள்ளார், ஊட்டி தலா 5 செ.மீ., திருவாரூர், திருவாடானை, குளித்தலை, பூதப்பாண்டி, தக்கலை, தஞ்சாவூர் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications