தமிழகம் புதுவையில் 24 மணிநேரத்திற்கு கனமழை நீடிக்கும்: ரமணன்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் இலங்கைக்கு அருகில் கடந்த வாரம் குறைந்த அழுத்த தாழ்வு நிலை உருவானதால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கியது. அந்த குறைந்த அழுத்த தாழ்வு நிலை கன்னியாகுமரி கடல் பகுதியில் வலுப்பெற்று குறைந்த அழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதனால் மழையின் தன்மை பல்வேறு இடங்களில் அதிகரித்தது.

இந்தநிலையில் நேற்று காலை குறைந்த அழுத்த தாழ்வு பகுதி கரையை கடந்தது. இருந்தும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
24 மணிநேரத்திற்கு மழை
தற்போது தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணம் தெரிவித்துள்ளார்.
வட கேரளாவில்
செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், காற்றாழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. கற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வட கேரளா அருகே நிலைகொண்டுள்ளது. இதனால் 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாமநாதபுரத்தில் 13 செ.மீ.மழை பதிவாகியுள்ளது என்றார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
கேரளா மற்றும் லட்சத்தீவு மீனவர்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம்
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் தொடர்மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 32.55 அடியாக உள்ளது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு, வினாடிக்கு 500 கனஅடி வெளியேற்றப்படுகிறது.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications