தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கன மழை பெய்யுமாம்!
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. ஓரிரு மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பதிவானது. இதற்கிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24 மணி நேரத்தில், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை மாநகரைப் பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரூரில் 60 மி.மீ, திண்டுக்கல் மாவட்டம் - நிலக்கோட்டையில் 50 மி.மீ, விருதுநகர் மாவட்டம் - சாத்தூரில் 40 மி.மீ, பெரம்பலூர் மாவட்டம்- செட்டிக்குளம், திண்டுக்கல் மாவட்டம்- கொடைக்கானல், விருதுநகர் மாவட்டம் -சிவகாசி, மதுரை மாவட்டம்- உசிலம்பட்டி ஆகிய இடங்களில் 30 மி.மீட்டர் மழை பதிவாகியது.
புதுச்சேரி, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மாநகரைப் பொருத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில், நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications