தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை.. ஜில் ஜில் Mode-ல் பொதுமக்கள் விவசாயிகள்!
தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் நல்ல மழை அடித்து வெளுக்காத என மக்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.
தென்மேற்கு பருவமழையால் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

தமிழகம் முழுவதும்
அதே நேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று பிற்பகலுக்குப் பிறகு நல்ல மழை பெய்து வருகிறது.

சூறைக்காற்றுடன்
உளுந்தூர்பேட்டை நகர் பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடலூர் சுற்றுவட்டாரம்
திண்டுக்கல் , நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. விருதுநகர், கடலூர் மாவட்டம் காட்டுமன்னால்கோவில் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

ராமநாதபுரத்தில் பலத்த மழை
ராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கமூதி, அந்தியூர் உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது

காஞ்சி, திருவள்ளூரில் மழை
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், ஓரிக்கை, செவிலிமேடு, வாலாஜாபாத் உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கவரப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை புறநகரில் மழை
சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

பொதுமக்கள் மகிழ்ச்சி
நேற்று சேலத்தில் விடிய விடிய கொட்டிய மழையை தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று பரவலாக கொட்டித் தீர்க்கும் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications