தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜ ரத்தினம் திடீர் ராஜினாமா!
தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜ ரத்தினம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜ ரத்தினம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக அரசின் குற்றவியல் தலைமை வழக்கறிஞராக இருப்பவர் ராஜ ரத்தினம். இவர் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் பி குமாரிடம் ஜுனியராக பணியாற்றினார்.

தற்போது டிடிவி தினகரன் மீதான அந்நியச்செலாவணி வழக்கில் ஆஜராகி வருகிறார். எம்எல்ஏக்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன் முன்ஜாமீன் வழக்கிலும் வாதிட்டார்.
இந்நிலையில் இவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். தமிழக அரசுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ள அவர் சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications