For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

8 வழி சாலை தீர்ப்பில் மேல்முறையீடு செய்வோம்.. எடப்பாடியை எதிர்த்தால் டெட்பாடிதான்.. ராஜேந்திர பாலாஜி

Google Oneindia Tamil News

ஸ்ரீவில்லிபுத்தூர்: 8 வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரூ 10 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டிருந்தது. இந்த திட்டத்துக்கு சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இருந்து 1,900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

Rajendra Balaji says that we will appeal against judgement of 8 way road project

இதை எதிர்த்து விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கின் மீது இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது.

சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரத்து... தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரத்து... தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

இதுகுறித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து யாரும் பாதிக்காத வகையில் முதல்வர் முடிவு எடுப்பார்.

எடப்பாடியை எதிர்க்கும் அரசியல் இயக்கம் டெட்பாடியாக உள்ளது. எந்த அரசியல் கட்சியும் உயிருள்ள இயக்கமாக இல்லை. மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் தினகரனுக்கு துளியும் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஸ்டாலின் திமுக தலைவரானார் என்றார்.

அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமகவோ இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளது. மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதீர் என அரசிடம் வலியுறுத்துவோம் என அன்புமணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Minister Rajendra Balaji says that the government will appeal against judgement in 8 way green project.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X