இன்று ரஜினி பிறந்த நாள், லிங்கா ரிலீஸ்... தமிழகமெங்கும் திருவிழா கோலம்!
சென்னை: இன்று டிசம்பர் 12-ம் தேதி 'உலக சூப்பர் ஸ்டார்' என ரசிகர்கள் கொண்டாடும் ரஜினியின் பிறந்த நாள். அவர் நடித்த மெகா படமான லிங்காவின் வெளியீட்டு நாளும் அதுவே.
எனவே ரஜினி ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். இரட்டை சந்தோஷமல்லவா!
அவர்களின் இந்த சந்தோஷம் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு வருகிறது, கடந்த சில வாரங்களாக.

ரஜினி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும், லிங்கா பெரும் வெற்றிப்படமாக அமைய வேண்டும் எனப் பிரார்த்தித்து ரசிகர்கள் பல்வேறு பிரார்த்தனைகள், தங்கத் தேர் இழுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களைச் செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் அத்தகனை பெரிய கோயில்களிலும் நேற்று மாலையும் இன்றும் தங்கத் தேர் இழுப்பு வைபவம் ரஜினி ரசிகர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக ரஜினி ரசிகர்களால் உதவிகள் பெற்றோர் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டும். அன்னதானம், இலவச உடைகள், இலவச கல்வி உபகரணங்கள், இலவச மருத்துவ உதவிகள், ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்பு தாணம், நிதியுதவி... என தொடர்ந்து செய்து வருகின்றனர். ரஜினியின் அனைத்து மன்றங்களும் உலகெங்கும் இதனைச் செய்து வருகின்றனர்.
வெறுமனே கேக் வெட்டுவது, பட்டாசு வெடிப்பது என்றில்லாமல், முழுக்க முழுக்க மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
லிங்கா
லிங்கா ரிலீஸைப் பொறுத்தவரை, அதனை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். படம் வெளியாகும் அத்தனை அரங்குகளும் மக்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன என்றால் மிகையல்ல. நேற்று நள்ளிரவிலிருந்து லிங்கா சிறப்புக் காட்சிகள் நடை பெறுகின்றன.
சென்னைக்கு கொஞ்சமும் சளைக்காத வகையில் தமிழகத்தின் பிற பகுதிகளிலும், உலகின் மற்ற நாடுகளிலும் லிங்கா வெளியீட்டை விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications