Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கமல் பேசுவார்... ரஜினிதான் செயல்படுத்துவார் - ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி தாக்கு!

கமல் பேசிக்கொண்டே இருப்பார். ஆனால் ரஜினிதான் செயல்படுத்துவார். ரஜியுடன் சேருவதுதான் கமலுக்கு நல்லது என ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சீனிவாசன் ஆங்கில செய்தி சேனலில் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

மும்பை: கமலால் பேசத்தான் முடியும். ஆனால் ரஜினிதான் செயல்படுத்துவார் என ரஜினி ரசிகர்மன்ற நிர்வாகி சீனிவாசன் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கமலை அவர்து இல்லத்தில் சந்தித்தார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு கமலும் அர்விந்த கெஜிரிவாலும் இணைந்து பேட்டி கொடுத்தனர். மேலும் கமல் தான் அரசியலுக்கு வருவது உறுதி. ஆனால், எந்தக் கட்சியிலும் சேரப் போவதில்லை என கூறினார்.

இந்நிலையில் ஆங்கில சேனலில் ரஜினி, கமல் அரசியல் என்டரி குறித்து பேசப்பட்டது. அப்போது பேசிய ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சீனிவாசன், தமிழில் டுவிட் செய்பவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல. மக்களுக்கு என்ன வேண்டும் என உணர்வது அவசியம். அதை ரஜினி உணர்ந்துள்ளார்.

கமல் பேசுவார், அவ்வளவுதான்!

கமல் பேசுவார், அவ்வளவுதான்!

கமல் பேச மட்டுமே செய்வார். ஆனால் ரஜினி தான் செயல்படுத்துவார். கமல் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக பேசிக்கொண்டுள்ளார். கமலுக்கு தற்போது கையில் படங்கள் இல்லை. அதனால் அவர் பெரிய திரையில் இருந்து சின்ன திரைக்கு வந்துள்ளார். அதனால் தன் ஏதாவது ஸ்டேட்மெண்டுகளை விட்டுக்கொண்டுள்ளார்.

கமல் ரஜினியுடன் சேருவதுதான் அவருக்கு நல்லது

கமல் ரஜினியுடன் சேருவதுதான் அவருக்கு நல்லது

கமல் அரசியலுக்கு வர வேண்டும் என்றால் அவர் முன்னால் ஒரே ஒரு வாய்ப்பு தான் உள்ளது. அது அவர் ரஜினியுடன் சேர வேண்டும். ரஜினிதான் முதல்வராக வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.

ரஜினி மிகவும் நேர்மையானவர்

ரஜினி மிகவும் நேர்மையானவர்

கமலுக்கு நிறைய ஃபாலோயர்கள் டுவிட்டரில் இருக்கலாம். அது தமிழக மக்கள் தொகையில் 1% மட்டுமே. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் ரஜினிக்குத்தான் ஓட்டுப்போடுவார்கள். காரணம் ரஜினி தான் நேர்மையானவர். ஆனால் விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆவதில் பிரச்சனை வந்த போது, கமல் இந்தியவை விட்டே போகிறேன் எனக் கூறியவர்.

ரஜினி அரசியலுக்கு வருவார்.

ரஜினி அரசியலுக்கு வருவார்.

ரஜினி அரசியலுக்கு வருவதற்கான அனைத்து அடிப்படை வேலையையும் செய்துவிட்டார். தற்போது அரசாங்கம் என்று ஒன்று பெயரளவில் இயங்கிக்கொண்டுள்ளது. அந்த நேரத்தில் எதற்கு ஸ்டேட்மெண்டுகளைக் கொடுக்க வேண்டும். ரஜினி சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவார். அந்த நேரத்துக்காக காத்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+