போய்யா நீயும் வேணாம்... உன் தியேட்டரும் வேணாம்! - காசியில் ரஜினி ரசிகர்கள் ஆவேசம்
சென்னை: வழக்கமாக ரஜினியின் படங்கள் வெளியாகும்போது முதல் நாள் முதல் காட்சி முந்தைய நாள் இரவு அல்லது முதல் நாள் அதிகாலையில் சிறப்புக் காட்சிகளாக ரசிகர்களுக்கு திரையிடப்படும்.
இந்தக் காட்சியின்போது குறிப்பாக சென்னை கேகே நகரில் உள்ள காசி திரையரங்கம் அதகளப்படும். மேள தாளங்கள், வாணவேடிக்கை, நடனங்கள் என திரையரங்கமே ஒரு திருவிழா மையம்போல காட்சி தரும்.

இந்த முறை கபாலி ரிலீசையொட்டி இந்த அதிரடி கொண்டாட்டங்களை நேற்றே தொடங்கிவிட்டனர் ரசிகர்கள். காசியில் படம் வெளியாகிறதா இல்லையா என்ற சந்தேகம் இருந்த போதிலும், நள்ளிரவிலிருந்தே பேனர்கள், தோரணங்கள் கட்டி, வாண வேடிக்கை நடத்திக் கொண்டிருந்தனர்.
காலை 4 மணிக்கு முதல் சிறப்புக் காட்சி திரையிடப்போவதாக அறிவித்து, ஏக விலைக்கு டிக்கெட்டுகளையும் விற்றிருந்தனர். இந்த டிக்கெட்டுகளில் பெருமளவு ரசிகர்களுக்குப் போகவில்லை. ஐடி மற்றும் பெரும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் போய்விட்டது.
மேலும் பேனர்கள் வைப்பது, ரசிகர் கொண்டாட்டங்கள் நடத்துவதிலும் ஏக கெடுபிடி காட்டியுள்ளனர் தியேட்டர்காரர்களும் போலீசாரும். ஒரு கட்டத்தில் வெறுத்துப் போன ரசிகர்கள், போய்யா நீயும் உன் தியேட்டரும்... பேனர் கட்டி திருவிழா மாதிரி கொண்டாடற எனக்கே டிக்கெட் இல்லையா... என்று கூறிவிட்டு, கட்டிய பேனர்களை அவிழ்த்துச் சென்றனர் ரசிகர்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications