Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் "வெயிட்டிங்".. ரஜினி சந்திக்காததால் ஏமாற்றம்.. வருவாரா??

ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை சந்திக்க ரசிகர்கள் ராகவேந்திரா மண்டபத்தின் முன்பு திரண்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ரஜினியை பார்க்கத் திரண்ட ரசிகர்கள்... போயஸ்கார்டனில் தள்ளுமுள்ளு!- வீடியோ

    சென்னை: ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை சந்திக்க ரசிகர்கள் ராகவேந்திரா மண்டபத்தின் முன்பு திரண்டுள்ளனர்.

    நடிகர் ரஜினிகாந்தின் 68வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். உலகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

    ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அவரது ரசிகர்கள் சென்னை போயஸ் கார்டன் மற்றும் ராகவேந்திரா மண்டபத்தின் முன்பு திரண்டுள்ளனர்.

    சிறப்பு பூஜைகள்..

    சிறப்பு பூஜைகள்..

    ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ராகவேந்திரா மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ரஜினி ரசிகர்கள் திரண்டுள்ளனர்.

    பண்ணை வீட்டில் ரஜினி?

    பண்ணை வீட்டில் ரஜினி?

    அவர்கள் ரஜினி நிச்சயம் சந்திப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஆனால் நடிகர் ரஜினி காந்த் அதிகாலையிலேயே கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு சென்றுவிட்டதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    ரசிகர்கள் ஏமாற்றம்

    ரசிகர்கள் ஏமாற்றம்

    ஆனாலும் அதனை ஏற்க மறுத்துள்ள ரசிகர்கள் ரஜினி நிச்சயம் தங்களை சந்திப்பார் என கூறி அங்கே காத்திருக்கின்றனர். காலை முதல் காத்திருக்கும் ரசிகர்கள் இதுவரை ரஜினி வராததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    ரசிகர்களை தவிர்த்த ரஜினி

    ரசிகர்களை தவிர்த்த ரஜினி

    அவரது பிறந்த நாளான இன்று கட்சிக்குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ரஜினி ரசிகர்களை சந்திக்காமல் தவிர்த்துள்ளார். ரஜினி அரசியலுக்கும் வருவார் தங்களை சந்திக்கவும் வருவார் என பதாகைகளுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+